மைத்திரியே அரசியல் தீர்வு இழுத்தடிப்பிற்கு காரணம்:எம்.ஏ.சுமந்திரன்
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் விடயத்திலும் இதே இழுத்தடிப்புக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை தொடர்பாக, நேற்று கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 34/1 என்ற தீர்மானம் இரண்டிற்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவற்றிலே, குற்றங்கள் தொடர்பாக சர்வதேச தலையீட்டுடன் நீதி விசாரணை இடம்பெறும் என்பதை இலங்கை ஏற்றுக் கொண்டது.
எனினும், சர்வதேச தலையீடு வேண்டாம் என்றும் உள்நாட்டிலேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்கின்றோம் என்றும் கூறியிருப்பதன் மூலம் இலங்கைக்கு மட்டுமன்றி, சர்வதேசத்திற்கு எழுத்து மூலமாக இரண்டு தடவைகள் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளாரென சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply