கேட்டுக் கேள்வியின்றி பணத்தை நாட்டுக்குள் எடுத்துவர அனுமதிக்க வேண்டும்:அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பணத்தை வரி இன்றி நாட்டிற்குள் எடுத்து வர அனுமதி வழங்கினால் ரூபாவின் பெறுமான வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தலாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையர்களின் பணம் வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அவற்றை இலங்கைக்கு எடுத்து வர அவர்கள் விரும்பாமல் இருப்பதற்குக் காரணம் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்பதனால் ஆகும்.
உள்நாட்டுக்குள் பணம் எடுத்துவர முடியாமல் இருப்பவர்களுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்காகவது வரி விலக்கு அளித்தால், வெளிநாட்டு செலாவணி இலங்கையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பணத்தை எடுத்து வருபவர்களிடம் எங்கிருந்து பணத்தை எடுத்து வருகிறீர்கள் எனக் கேள்வி கேட்கக் கூடாது. அவர்களிடம் எந்த விதமான விசாரணைகளையும் நடாத்தக் கூடாது எனவும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply