பலவீனமான நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது: கோட்டா
பொலிஸ் மா அதிபர் ஒருவரைப் பதவி நீக்க முடியாத பலவீனமான நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இராணுவ அதிகாரியை ஐ.நா. திருப்பி அனுப்புவது தொடர்பாக கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் இன்னும் பலமடையவில்லை என்பது இலங்கையின் இராணுவ அதிகாரி ஒருவரை ஐ.நா. திருப்பி அனுப்புவது தொடர்பில் தெளிவாக விளங்குகின்றது.
யுத்த காலத்தில்கூட ஐ.நா.வின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை எம்மால் அனுப்ப முடிந்தது. எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை.
சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதெனக் கூறித்திரியும் இந்த அரசாங்கம் ஏன் இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்படுவதைத் தடுக்க முடியவில்லை?
எமது ஆட்சியில் இவ்வாறு ஒரு சம்பவம் கூட இடம்பெறுவதற்கு நாம் அனுமதியளித்திருக்க மாட்டோம். இந்த விடயத்தில் உறுதியான முடிவினை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply