இவ்வருட இறுதிக்குள் இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு
இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதற்கமைய பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி ஆளுநர்களுக்கு அறிவித்தார்.
2018 ஆம் ஆண்டுக்கான மாகாணசபை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ஆளுநர்களுக்கு இப்பணிப்புரையை விடுத்தார். ஜனாதிபதியுடனான இக்கலந்துரையாடலில் மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply