தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுவது அவசியம் ; காலம் தாழ்த்தக்கூடாது !

ஜனநாயகத்தின் அம்சமான தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுவது அவசியம் என்றும் அவற்றை காலம் தாழ்த்தக்கூடாதென்றும் இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் Jorn Rohde தெரிவித்துள்ளார்.இலங்கையில் தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை தொடர்பாக ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள ஜேர்மனி தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அசாதாரண நிலைமைகளை தவிர்த்துக்கொள்ளவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சட்டத்தை மதித்து செயற்படுவது ஒவ்வொருவரினதும் கடமையென சுட்டிக்காட்டிய ஜேர்மனி தூதுவர், பதவிக்காலம் முடிவடைந்த உடனேயே அடுத்த தேர்தலை நடத்துவது அவசியமென வலியுறுத்தினார்.

இவ்வாறு தேர்தல்களை காலதாமதமாக்கும் நிலை, இலங்கையில் மட்டுமன்றி தமது நாட்டிலும் ஏனைய சில நாடுகளிலும் காணப்படுவதாகவும் ஜேர்மனி தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் உள்ளுாராட்சி மன்ற தேர்தல்கள் நீண்ட இழுபறிக்குப் பின்னரே இடம்பெற்றது. தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், ஜேர்மனி தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply