மஹிந்தவின் உரையில் நம்பிக்கையில்லை என்றதும் சபையில் பதற்றம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அதில் நம்பகத் தன்மையில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவிப்புச் செய்தார்.
இதன்போது, பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பொன்றை நடாத்துமாறு சபாநாயகருக்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாராளுமன்றத்துக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் கதிரை வரை சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். உடனே ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் ஒன்றுகூடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பாராளுன்றத்தில் குழப்ப நிலை காணப்படுதாகவும் அராஜக நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி தலையிடுவாரா என்பது சிலரது எதிர்பார்ப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply