பொலிஸார் இருவர் கொலை : முன்னாள் புலி உறுப்பினர் கைது
வவுனத்தீவு பொலிஸ் வீதிப்போக்குவரத்து பிரிவின் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலிகள் அமைப்பின் மற்றுமொரு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு ஒன்றினால் குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனத்தீவு பகுதியை சேர்ந்த முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி பொலிஸ் தடுப்புக்காவலில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply