இலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா உயர்மட்டப் பேச்சு

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அண்மையில் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அவர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்புகளின்போது, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக முக்கிய கனம் செலுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
குறிப்பாக, இலங்கையின் அண்மைய நிலைவரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply