பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுமக்கள் உள்ளனர் : மஹிந்த

நாட்டு மக்கள் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பன்னிப்பிட்டி, விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையின் தற்போதைய அரசியல் மிகவும் நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. எனினும், நாட்டு மக்கள் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.

அரசியல் என்று வரும்போது பதவி போகலாம். வரலாலம். ஆனால், பொதுமக்கள் எம்முடன் இருக்கும்வரை நாம் அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடுவேன்.” என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply