என்னதான் துள்ளினாலும், இறுதியில் தீர்மானம் எடுப்பவர் ஜனாதிபதி: எஸ்.பீ.

அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
உத்தேச தேசிய அரசாங்க பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலுள்ள ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்த அமைக்க தயாராகின்றது. இதன் மூலம் அமைச்சரவையின் உறுப்பினர்களை 48 ஆக அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றம் செல்லவுள்ளோம். இது பண்பாடற்ற ஒரு செயலாகும். அத்துடன், இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி முன்வைக்கப்படுமிடத்து ஜனாதிபதி அதனை அங்கரிக்க மாட்டார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply