UNPயின் மக்கள் பேரணி 10 ஆம் திகதி காலிமுகத்திடலில்

ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி எதிர்வரும் 10 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பிற்பகல் 2.00 மணிக்கு காலி முகத்­தி­டலில் இடம்­பெ­ற­வுள்­ளது.இதில் ஐ.தே.கட்சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவுக்கு ஆதரவை வெளிக்காட்டும் சுமார் 3 இலட்சம் மக்­களை ஒன்று திரட்டவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேன­சிங்க அறிவித்துள்ளார்.

எதிர்­வரும் 10 ஆம் கொழும்பு – காலி முகத்­தி­டலில் பாரிய மக்கள் பேரணி இடம்­பெ­ற­வுள்­ளது. காலி முகத்­தி­டலில் அதி­க­பட்சம் ஒன்­றரை இலட்சம் மக்கள் மாத்­தி­ரமே ஒன்­றி­ணைய முடியும். எனினும் எமது பேர­ணியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

இதனால், காலி முகத்­தி­ட­லுடன் அந்த பகு­தி­யி­லுள்ள பிர­தான வீதி­யையும் பயன்­ப­டுத்த எதிர்­பார்த்­துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அறி­வித்­துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply