அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய-மேற்கு பகுதியில் மிசவுரி மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கன்ஸாஸ் நகரில் டெக்கிலா கே.சி. என்ற மதுபான விடுதி இயங்கி வருகின்றது.வார இறுதிநாள் என்பதால் (உள்ளூர் நேரப்படி) நேற்று பின்னிரவில் இருந்து இந்த மதுபான விடுதியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த விடுதியில் இருந்த ஒருவர் திடீரென்று துப்பாக்கியை உருவி அருகில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 4 பேரின் பிரேதங்களையும் குண்டு காயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி தப்பியோடி விட்டதாக குறிப்பிட்ட கன்ஸாஸ் நகரப் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply