யாழ். சர்வதேச விமானப் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி திறக்கப்பட்ட யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவைகளை நடாத்தப்படவுள்ளதாகவும் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் அவை இடம்பெறும் எனவும் விமான நிலைய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இன்று காலை 10.35 மணிக்கு இந்தியாவின் சென்னை நகர் நோக்கி விமானம் பயணிக்கவுள்ளதாகவும், இவ்வாறு யாழிலிருந்து சென்னைக்கு ஒரு வழிப்பயணத்துக்கு 12990.00 ரூபா விமான டிக்கெட் கட்டணம் அறவிடப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply