சட்டவிரோதமாக இந்திய செல்ல முயன்ற 8 பேர் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 8 இலங்கையர்கள் தலைமன்னார், மணல்பாறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (11) அதிகாலை வட மத்திய கடற்படை கட்டளை பிரிவினால் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 08 பேரை கைது செய்துள்ளதாக, கடற்படை பேச்சாளர், லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரில், 5 ஆண்கள், ஒரு பெண் மற்றும் சிறுவன் ஒருவரும் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு சில ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, கடற்படையின் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக சட்டவிரோத குடியேறிகள் மற்றும் மனித கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வர கடற்படையால் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply