புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை பிரதமராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவு செய்துள்ளார் என சர்வதேச ஊடகமான AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இடமளித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.
அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவைப் பற்றி ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக நாளை அறிவிக்கஉள்ளார்.
இந்நிலையில் நாளை 16 அமைச்சர்கள் கொண்ட காபந்து அரசின் புதிய பிரதமராக 74 வயதுடைய மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply