புதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் : வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர்பசேல ஜயரத்ன சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply