பொருளாதார நெருக்கடி, மக்களின் பிரச்சினைகளுக்கே தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் : மைத்திரிபால சிறிசேன

கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை விடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குமே தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொலனறுவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
அனைவரும் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றியே அதிகமாக பேசுகின்றனர். அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள் அல்ல நாட்டின் பிரச்சினை. மக்களின் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளே நாட்டின் பிரச்சினையாகும். அவற்றுக்கே நாம் முக்கியத்துவமளிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தோம். பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரமே இந்த ஆதரவை வழங்கினோம். அந்த உடன்படிக்கையின் பிரகாரமே எதிர்கால நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply