பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை இந்தியா பயணம்

பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர் 11-ம் தேதி இலங்கை திரும்புகிறார். அவரது பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார். மேலும், இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

இந்த சுற்றுப்பயணத்தில் வாரணாசி, சாரநாத், புத்த கயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை பிரதமராக பதவியேற்றபின், மகிந்த ராஜபக்சே இந்தியா செல்ல இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply