சீதுவ பகுதியில் நபரொருவர் தாக்கப்பட்டு கொலை

Sunday, December 15th, 2024 at 10:38 (SLT)

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 02 வது ஒழுங்கை பகுதியில் நபர் ஒருவர், நேற்று சனிக்கிழமை (14) தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 47 வயதுடைய ஜூபிலி மாவத்தை, வைக்கால பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

தெற்காசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : பேச்சுக்களை மீள ஆரம்பிக்க சீனா தீர்மானம்

Sunday, December 15th, 2024 at 10:31 (SLT)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் சென்ற இலங்கையர்கள் குழுவை நாடு கடத்த தீர்மானம் 

Sunday, December 15th, 2024 at 10:24 (SLT)

இஸ்ரேலுக்கு தொழிலுக்காகச் சென்று தொழில் ஒப்பந்தத்தை மீறிய 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்காக தொழில் விசாவில் இஸ்ரேலுக்கு வந்த இவர்கள், பணியிடங்களை விட்டு தப்பிச்சென்று பேக்கரிகளில் பணிபுரியும் போது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மீகொடயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

Sunday, December 15th, 2024 at 10:20 (SLT)

மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (14) காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆளும் கட்சியின் தகைமையை ஆராய தெரிவுக்குழு : பாராளுமன்றில் யோசனையை முன்வைக்க தீர்மானம்

Sunday, December 15th, 2024 at 10:15 (SLT)

சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ள அசோக்க ரன்வலவின் ‘கலாநிதி பட்டம்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர் கல்வி தகைமைகள் குறித்து ஆராய்வதற்கு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

போலி கல்வித் தகைமையுடன் ஆளும் தரப்பில் 07 உறுப்பினர்கள் அசோக்க ரன்வல பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் : பொதுஜன பெரமுன

Sunday, December 15th, 2024 at 10:10 (SLT)

போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும். கலாநிதி என்று குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்ட அசோக்க ரன்வல பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள்

Saturday, December 14th, 2024 at 10:57 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர். அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்ய கடவுள் வந்தாலும் அனுமதி இல்லை : யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி

Saturday, December 14th, 2024 at 10:48 (SLT)

“என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

மேலும் வாசிக்க >>>

நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை அபிவிருத்தி செய்வதற்கே வந்தோம் : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

Saturday, December 14th, 2024 at 10:39 (SLT)

நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்

Saturday, December 14th, 2024 at 10:35 (SLT)

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கைகளில் கூறப்பட்டுமிருந்தது.

மேலும் வாசிக்க >>>

அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?

Saturday, December 14th, 2024 at 10:31 (SLT)

பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு இலங்கைத்தீவை வங்குரோத்து நிலைக்குத் தள்ள ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி வழிவகுத்தது என்ற உறுதியான கருத்து மேலோங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிகளில் நாட்டு மக்கள் சரியான ஆட்சி முறையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருக்கவில்லை.

மேலும் வாசிக்க >>>

அரிசியின் விலையில் வீழ்ச்சி

Saturday, December 14th, 2024 at 10:27 (SLT)

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மாநகர வேட்பாளராக ஹிருணிக்கா

Saturday, December 14th, 2024 at 10:25 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குத் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.எனினும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக ஹிருணிகாவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

யாழில் அர்ச்சுனாவால் கோபமடைந்த அரச ஊழியர்கள்

Saturday, December 14th, 2024 at 10:20 (SLT)

நேற்றையதினம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) கலந்து கொண்டு குழப்பம் விளைவித்துள்ளார்.குறித்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

முன்மொழிவை சமர்ப்பிக்கவுள்ள ஜீவன்

Saturday, December 14th, 2024 at 10:15 (SLT)

தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க ஒரு தெரிவுக்குழுவை அமைக்கும் முன்மொழிவை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (NDF)என்பன தீர்மானித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>