அடுத்த சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் 

Saturday, December 14th, 2024 at 10:15 (SLT)

சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லாத நிலையில் அவர் தற்போது பதவி விலகியுள்ளார். இந்நிலையில், அடுத்த சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பதியை கொண்டுவருவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்ப்பார்ப்பு

Saturday, December 14th, 2024 at 10:15 (SLT)

இந்த ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து விளக்கமளிப்பு

Saturday, December 14th, 2024 at 10:15 (SLT)

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது

Saturday, December 14th, 2024 at 10:15 (SLT)

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று 13.12.2024 சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

Saturday, December 14th, 2024 at 9:59 (SLT)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் உடைக்க மாட்டோம்: ஜனாதிபதி

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

தமது அரசாங்கத்தில் எந்த மட்டத்தில் இருந்தாலும் தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் உடைக்க இடமளிக்க மாட்டோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய கஞ்சா

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

14 வயது சிறுமியை விபச்சார தொழில் ஈடுபடுத்திய நபருக்கு நேர்ந்த கதி

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

14 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய 31 வயதுடைய நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 450,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்ய்பட்டுள்ளார் என டைம்ஸ் சஞ்சிகை அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக டைம்ஸ் சஞ்சிகை ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அம்பாந்தோட்டையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது

Friday, December 13th, 2024 at 12:00 (SLT)

கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சிறுவர்களுக்கான சட்டத்தை கடுமையாக்கிய குயின்ஸ்லாந்து

Friday, December 13th, 2024 at 11:55 (SLT)

அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான விதிக்கப்படும் அதே தண்டனையை எதிர்கொள்வார்கள்.

மேலும் வாசிக்க >>>