தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கம்

Wednesday, December 17th, 2025 at 9:48 (SLT)

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

Wednesday, December 17th, 2025 at 9:42 (SLT)

16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 30 வயதுடைய இளைஞர் ஒருவர் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கூமடுகண்டலில் தமிழர்களின் நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி : நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

Wednesday, December 17th, 2025 at 9:39 (SLT)

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடித்தனமாக யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

Tuesday, December 16th, 2025 at 10:03 (SLT)

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானார்.

மேலும் வாசிக்க >>>

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து : 07 பேர் உயிரிழப்பு

Tuesday, December 16th, 2025 at 9:59 (SLT)

வட அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ நாட்டில் திங்கட்கிழமை (15) சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.அபல்கோ நகரில் இருந்து புறப்பட்டு டொலுகா விமான நிலையம் அருகே பறந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு : துப்பாக்கிதாரிகள் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் விசாரணை 

Tuesday, December 16th, 2025 at 9:54 (SLT)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

வாழைச்சேனை பகுதியில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Tuesday, December 16th, 2025 at 9:49 (SLT)

வாழைச்சேனை – கஹனேரி பகுதியில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று முதல்

Tuesday, December 16th, 2025 at 9:40 (SLT)

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

புகையிரத வீதிகளைப் புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகும் : அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்

Tuesday, December 16th, 2025 at 9:36 (SLT)

மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

Monday, December 15th, 2025 at 12:00 (SLT)

திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்கவும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க 354 பவுண் தங்கம்,77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் நூறு கோடிக்கும் அதிக பெறுமதியான பல்வேறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சிலாபம் கடல்பகுதியில் 1740 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

Monday, December 15th, 2025 at 11:56 (SLT)

சிலாபம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை (10) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (10) மாலை சிலாபம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஐம்பத்தைந்து (55) பைகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

Monday, December 15th, 2025 at 11:52 (SLT)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadonoக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

சிட்னி துப்பாக்கிச் சூடு இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை:பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

Monday, December 15th, 2025 at 11:49 (SLT)

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில் வேறுபாடு ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளோம் : நாமல்

Monday, December 15th, 2025 at 11:43 (SLT)

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது

Monday, December 15th, 2025 at 11:40 (SLT)

புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>