நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு

Saturday, November 22nd, 2025 at 8:16 (SLT)

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் : நாமல்

Saturday, November 22nd, 2025 at 8:14 (SLT)

பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Saturday, November 22nd, 2025 at 6:44 (SLT)

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

அரசுக்கு எதிராக நுகேகொடை பேரணியில் பங்கேற்க மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

Friday, November 21st, 2025 at 12:06 (SLT)

அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்க மாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பேரணியில் பங்கேற்பீர்களா, இல்லையா எனக் கட்சியின் செயலாளர் என்னைக் கேட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஜீவனின் திருமண நிகழ்வில் பங்கேற்க இந்தியா பயணமானார் ரணில்

Friday, November 21st, 2025 at 12:02 (SLT)

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானிய கடலில் ரஷ்ய உளவு கப்பல் அத்துமீறி பிரவேசம்

Friday, November 21st, 2025 at 11:59 (SLT)

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவுக்கப்பல் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறுகையில், கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷ்ய கப்பல் பிரவேசித்துள்ளது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் வாசிக்க >>>

இலஞ்சம் பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Friday, November 21st, 2025 at 9:32 (SLT)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பௌசர் உதவியாளர் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து இலஞ்சம் பெற்ற தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம் : ரணில்

Friday, November 21st, 2025 at 9:28 (SLT)

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப் பணியாமல் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

Friday, November 21st, 2025 at 9:24 (SLT)

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யுக்திய நடவடிக்கையால் மனித உரிமை மீறல் : நட்டஈட்டு மனுவிற்கு அனுமதி

Friday, November 21st, 2025 at 9:18 (SLT)

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கிராண்ட்பாஸ் பொலிஸாரால் தம்மை கைது செய்து, போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி தந்தை மற்றும் மகன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (20) அனுமதி வழங்கியது.

மேலும் வாசிக்க >>>

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரே ஆசிரியர் நியமனங்கள் : பிரதமர் ஹரிணி அமரசூரிய 

Thursday, November 20th, 2025 at 11:46 (SLT)

ஆசிரியர் சேவை யாப்புக்கு அமைவாக , நீதிமன்ற நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னரே ஆசிரியர் நியமனங்கள் இடம்பெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பஸ்ஸில் ஏற முற்பட்டவர் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு

Thursday, November 20th, 2025 at 11:43 (SLT)

கண்டியில் வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை – கண்டி வீதியில் பிடியேகெதர பகுதியில் பஸ்ஸில் ஏற முற்பட்ட நபரொருவர் பஸ்ஸிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யட்டிராவன பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

SLFP உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Thursday, November 20th, 2025 at 11:40 (SLT)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

4 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது

Thursday, November 20th, 2025 at 11:37 (SLT)

சுமார் நான்கு கோடி ரூபாய்க்கும் (40 மில்லியன் ரூபாய்க்கும்) அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் மூன்று நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்த மூன்று விமானப் பயணிகளே இவ்வாறு விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள் : டி.வி.சானக

Thursday, November 20th, 2025 at 9:10 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தங்காலை கூட்டத்துக்கு பொலிஸார் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>