பலஸ்தீனக் கொடியை உடையாக அணிந்த நெதர்லாந்து எம்.பி

Saturday, September 20th, 2025 at 9:48 (SLT)

காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் பலஸ்தீனக் கொடியை அணிந்து வந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Saturday, September 20th, 2025 at 9:45 (SLT)

10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜேர்மன் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Saturday, September 20th, 2025 at 9:40 (SLT)

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சி

Saturday, September 20th, 2025 at 9:34 (SLT)

ஐக்கிய தேசியக் கட்சி இன்று (20) அதன் 79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

Saturday, September 20th, 2025 at 9:31 (SLT)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் 200 கிராம் போதைப் பொருள் மீட்பு

Saturday, September 20th, 2025 at 9:27 (SLT)

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று (19) மாலை 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

எனது தந்தையின் ஒரே ஆசை நான் எப்படியாவது நிறைவேற்றுவேன் :துனித் வெல்லாலகே

Saturday, September 20th, 2025 at 9:22 (SLT)

தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உள்ளக பொறிமுறை ஊடாக நீதி: பிரதமர் உறுதி

Friday, September 19th, 2025 at 11:12 (SLT)

” உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுவருகின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும்.”

மேலும் வாசிக்க >>>

கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவை மேம்படுத்தப்படும் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Friday, September 19th, 2025 at 11:07 (SLT)

கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Friday, September 19th, 2025 at 11:04 (SLT)

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் உயிர்மாய்ப்பு 

Friday, September 19th, 2025 at 11:00 (SLT)

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

Thursday, September 18th, 2025 at 23:01 (SLT)

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

Thursday, September 18th, 2025 at 22:57 (SLT)

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். 46 வயதான இவர் இன்று சிகிச்சை பலனின்றி சென்னை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞன் கைது

Thursday, September 18th, 2025 at 7:46 (SLT)

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆளுந்தரப்பினரின் சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் :மஹிந்த அமரவீர

Thursday, September 18th, 2025 at 7:43 (SLT)

ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>