நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் ஏற்படலாம்

Monday, September 15th, 2025 at 12:10 (SLT)

அண்மையில்ல நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறை போராட்டங்கள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் போன்றன இலங்கையிலும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புதையல் தோண்டிய 7 பேர் கைது

Monday, September 15th, 2025 at 10:32 (SLT)

நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : மஹிந்த

Monday, September 15th, 2025 at 10:29 (SLT)

பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது. சர்வதேச தலையீடுகளுக்கு அடிபணியாமல் அரச தலைவர்கள் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிகிரியா சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

Monday, September 15th, 2025 at 10:25 (SLT)

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய பெண் ஒருவர் இன்று (15) தொல்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் : 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

Monday, September 15th, 2025 at 10:22 (SLT)

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது:ஹரிணி அமரசூரிய

Monday, September 15th, 2025 at 6:53 (SLT)

வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தலாம் : சந்தன அபேரத்ன

Monday, September 15th, 2025 at 6:49 (SLT)

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம் என மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி வீத இலக்கை எட்ட தவறியுள்ளோம் : சஜித் பிரேமதாச

Monday, September 15th, 2025 at 6:17 (SLT)

நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும். எனினும் இதுவரை நாம் அந்த இலக்கை எட்டவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் பதில்களை தேட வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்துக்கு முறையிடுவோம் : காவிந்த ஜயவர்தன

Monday, September 15th, 2025 at 6:15 (SLT)

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகும் என்று அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்துக்கு முறையிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மித்தெனிய இரசாயனங்களில் ஐஸ் மூலப்பொருள் இருப்பது உறுதி

Sunday, September 14th, 2025 at 12:33 (SLT)

மித்தேனிய பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (NDDCB) விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

Sunday, September 14th, 2025 at 12:31 (SLT)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி : எலான் மஸ்க் ஆதரவு

Sunday, September 14th, 2025 at 12:28 (SLT)

பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க >>>

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அநீதி: சஜித் குற்றச்சாட்டு

Sunday, September 14th, 2025 at 12:21 (SLT)

கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16,600 ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்

Sunday, September 14th, 2025 at 12:19 (SLT)

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பில் உள்ள புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பித்தலுக்கான செலவு 424 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sunday, September 14th, 2025 at 12:15 (SLT)

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் நடைபெறவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறியதற்கு பதிலளித்த EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவரிடம் விசாரணை நடத்தினால் யுத்தக் குற்றங்களில் அவரது பங்கு தெரியவரும் என தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>