அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்

Sunday, September 14th, 2025 at 12:11 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

லலித் வீரதுங்கவிடம் சிஐடி விசாரணை

Sunday, September 14th, 2025 at 12:09 (SLT)

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது. விளையாட்டு அமைச்சகத்திற்காக வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து கார்ல்டன் சிறுவர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொங்கோவில் படகு விபத்து : 86 பேர் உயிரிழப்பு

Saturday, September 13th, 2025 at 9:59 (SLT)

வடமேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் வாசிக்க >>>

பேர வாவியின் துர்நாற்றம் காரணமாக மூடப்படும் ஹோட்டல்கள்

Saturday, September 13th, 2025 at 9:56 (SLT)

பேர வாவியிலிருந்து வீசும் கடும் துர்நாற்றம் காரணமாக, வாவிக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் போன்றவற்றை நடத்துவது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக வாவியின் இருபுறமும் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

பொரளை துப்பாக்கிச் சூடு : முக்கிய சந்தேகநபர் கைது

Saturday, September 13th, 2025 at 9:52 (SLT)

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நேபாள பாராளுமன்றம் கலைப்பு : தேர்தல் திகதியும் அறிவிப்பு

Saturday, September 13th, 2025 at 9:50 (SLT)

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார்.

மேலும் வாசிக்க >>>

நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி

Friday, September 12th, 2025 at 10:26 (SLT)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு

Friday, September 12th, 2025 at 10:22 (SLT)

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

காற்று மாசினை கட்டுப்படுத்துவது தொடர்பான கனடாவின் தீர்மானத்தில் மாற்றம்

Friday, September 12th, 2025 at 10:19 (SLT)

கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி அரசு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உமிழப்படும் காற்று மாசினை கட்டுப்படுத்தும் திட்டத்தை நீக்க பரிசீலித்து வருகிறது.

மேலும் வாசிக்க >>>

கரந்தெனிய இரட்டைக் கொலை சந்தேக நபர் அடையாளம்

Friday, September 12th, 2025 at 8:08 (SLT)

கரந்தெனியவில் 74 வயது மூதாட்டி மற்றும் அவரது 25 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு 27 வருட சிறை

Friday, September 12th, 2025 at 8:00 (SLT)

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ சதிப்புரட்சி செய்த குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு

Friday, September 12th, 2025 at 7:56 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

குடும்பஸ்தர்கள் இடையே மோதல் : ஒருவர் பலி

Thursday, September 11th, 2025 at 10:57 (SLT)

வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு

Thursday, September 11th, 2025 at 10:55 (SLT)

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்பதி (வயது 82) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதிகளின் 2024 வரப்பிரசாத செலவு

Thursday, September 11th, 2025 at 10:53 (SLT)

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்” சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>