மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு : சி.வி.கே. சிவஞானம்

Friday, August 15th, 2025 at 7:02 (SLT)

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனுராதபுரத்தில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு

Thursday, August 14th, 2025 at 19:36 (SLT)

அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

28 வயது இளைஞனை, 26 வயது இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்

Thursday, August 14th, 2025 at 19:34 (SLT)

28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர், பொலிஸாரினால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு : வௌியான மேலதிக தகவல்கள்

Thursday, August 14th, 2025 at 7:47 (SLT)

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மீகொடயில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

Thursday, August 14th, 2025 at 7:44 (SLT)

மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

மேலும் வாசிக்க >>>

‘செம்மணி’ நூல் வெளியீடு மற்றும் இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித புதைக் குழிகள் குறித்து கலந்துரையாடல் இன்று

Thursday, August 14th, 2025 at 7:41 (SLT)

சுயாதீன ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரதெர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோரின் படைப்பிலான ‘செம்மணி’ நூல் வெளியீடு ‘இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் மனித புதைக் குழிகள்’ என்ற கலந்துரையாடலுடன் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் : அகதி முகாமில் தடுத்து வைப்பு

Wednesday, August 13th, 2025 at 10:44 (SLT)

தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிக்கப்படும்

Wednesday, August 13th, 2025 at 10:41 (SLT)

யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, தலைமையில் நேற்றைய தினம் (12.08.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரிப்பு

Wednesday, August 13th, 2025 at 10:38 (SLT)

பருவப்பெயர்ச்சி காற்றுடன் இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வௌிநாட்டு ஆசைக் காட்டி பண மோசடி செய்த அதிகாரி கைது

Wednesday, August 13th, 2025 at 10:34 (SLT)

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

Wednesday, August 13th, 2025 at 10:32 (SLT)

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Wednesday, August 13th, 2025 at 10:28 (SLT)

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி வழங்கிய வாக்குமூலம்

Wednesday, August 13th, 2025 at 10:25 (SLT)

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி உரிமைச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை : சந்திரிகா

Wednesday, August 13th, 2025 at 10:22 (SLT)

ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மகிந்த ராஜபக்ச சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர் : திலித் ஜயவீர

Wednesday, August 13th, 2025 at 10:20 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>