ஈரான் தவறான முடிவை எடுத்தால் மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் ஈரானுடனான தற்போதைய போர் சூழலில் அந்நாட்டுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது குறித்து ஈரான் தலைவர்கள் புத்திசாலித்தனமாக தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

NETFLIX வெள்ளி வெளியாகும் புதிய படங்கள் : OTT உலகில் கடும் போட்டி

April 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17, 2026) OTT உலகில் பெரிய திருப்பமாக மாறியுள்ளது. உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான Netflix, ஒரே நாளில் பல புதிய படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை குறிவைத்து, பல்வேறு வகை படங்களை இந்த வாரம் வெளியிடுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தானில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்தது

April 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானுடன் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானுக்குச் சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி

April 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புதிய தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலகம் அமைதியின் செய்தியைக் கேட்க வேண்டும் : போப்

April 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்றுப் புதன்கிழமை அல்ஜீரியாவிலிருந்து கேமரூனுக்குத் தன்னுடன் விமானத்தில் பயணம் செய்த போப் லியோ XIV  செய்தியாளர்களிடம் பேசியபோது, இன்று உலகம் கேட்க வேண்டிய செய்தி அமைதி மற்றும் உரையாடல் பற்றியது என்று கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதி உதவி: சவுதி அரேபியா உறுதி

April 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பாகிஸ்தான் இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ரூ. 32,679 கோடியை செலுத்துவதற்கு தயாராகி வருகின்றது. மேலும் அதன் அந்நிய செலாவணி கையிருப்பின் மீது அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதியுதவியாக வழங்குவதற்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரோஹிங்கியா, வங்கதேசத்தினர் சென்ற படகு மூழ்கியதில் 250 பேர் மாயம்: அந்தமான் கடலில் பரிதாபம்

April 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 250 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் கொடியுடன் கூடிய படகு ஒன்று மலேசியா நோக்கி சென்றுகொண்டு இருந்தது. இந்த படகில் மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 250 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதிக பாரம் காரணமாக அந்த படகு அந்தமான் கடலில் கவிழ்ந்ததாக தெரிகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் போர் பின்னணியில் அமைதியை வலியுறுத்தி அல்ஜீரியாவில் போப் உரை

April 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் போர் தொடர்பாக அமெரிக்காவில் பிறந்தவரான போப் 15ம் லியோவுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. தீவிர இடதுசாரிகளுக்கு சேவை செய்வதை நிறுத்த வேண்டுமென போப்பை விமர்சித்த அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஆதரிக்கும் போப் தங்களுக்கு தேவையில்லை என்றார். நற்செய்தி புத்தகத்தில் கூறப்பட்டபடியே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுகோள் விடுப்பதாக கூறிய போப் லியோ, டிரம்பை பார்த்து பயமில்லை என்றார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீண்ட காலத்திற்கு எரிபொருள், உர விலைகள் அதிகரித்தபடியே இருக்கும்: ஐஎம்எப், உலக வங்கி எச்சரிக்கை

April 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கிழக்கில் போர்ச் சூழலால், உலகளவில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே நீடிக்கக் கூடும் என சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) ஆகியவை எச்சரித்துள்ளன. மத்திய கிழக்கு போரினால் ஏற்படும் எரிசக்தி மற்றும் பொருளாதார தாக்கங்களை கூட்டாக எதிர்கொள்ள, இம்மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருபகுதியாக சர்வதேச எரிசக்தி முகமை, சர்வதேச நிதியம், உலக வங்கி குழுமம் ஆகியவற்றின் தலைவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்து பேசினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

36 ஆண்டுகளில் இல்லாத உச்சம்; 1,600-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்

April 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு இடையே, அந்நாட்டு அரசு மரணதண்டனை நிறைவேற்றுவதை அதிரடியாக அதிகரித்துள்ளது. நார்வேயைச் சேர்ந்த ‘ஈரான் மனித உரிமைகள்’ (IHR) மற்றும் பாரிஸைச் சேர்ந்த ‘ECPM’ ஆகிய அமைப்புகள் நேற்று (ஏப்ரல் 13, 2026) வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் குறைந்தது 1,639 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 68 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக, 1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முற்றுகையை உடைத்த சீனா: அமெரிக்காவிற்கு சவால் விடுத்த சீன கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் அதிரடி திருப்பம்

April 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானியத் துறைமுகங்களுக்கான அமெரிக்காவின் ராணுவ முற்றுகையை சீனா பகிரங்கமாக நிராகரித்துள்ளது. இன்று (ஏப்ரல் 14, 2026) அதிகாலை, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ‘ரிச் ஸ்டாரி’ (Rich Starry) என்ற சீன எண்ணெய் கப்பல், அமெரிக்கக் கடற்படையின் கடும் கண்காணிப்பையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தியைத் தடையின்றி கடந்து சென்றுள்ளது. சுமார் 2.5 லட்சம் பேரல் மெத்தனால் எரிபொருளுடன் பயணிக்கும் இந்த கப்பலை அமெரிக்கக் கடற்படை தடுத்து நிறுத்தாதது, சர்வதேச அரசியல் அரங்கில் ஒரு முக்கியமான இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மண்முனையில் சிறுவனை பலி கொடுத்து புதையல்?

April 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒவ்வொரு மீட்டரும் எங்கள் கட்டுப்பாடு: டிரம்பின் முற்றுகை மிரட்டலுக்கு ஈரான் அதிரடி பதில்

April 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தீவிரமடைந்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் ஈரானியத் தலைமை, “இந்தக் கடல் எல்லைகளின் ஒவ்வொரு மீட்டரையும் நாங்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறோம்” என்று அறிவித்துள்ளனர். அமெரிக்கக் கடற்படை இந்தப் பகுதியை நெருங்குவது என்பது ஒரு போருக்கு வழிவகுக்கும் என்றும், சர்வதேச கடல் சட்டங்களின்படி இந்தப் பகுதி தங்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும் ஈரான் வாதிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹங்கேரியில் 16 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

April 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹங்கேரி நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் விக்டர் அர்பன் படுதோல்வி அடைந்ததையடுத்து, பீட்டர் மக்யார் தலைமையிலான திசா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கப்பல் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது அமெரிக்கா ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடங்கியது: மீண்டும் போர் மூளும் அபாயம்; மத்திய கிழக்கில் கடும் பதற்றம்

April 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்வதையும், வெளியேறுவதையும் தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை திட்டமிட்டபடி நேற்று மாலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து துறைமுகங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் மிரட்டி உள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த நிலையில், 40 நாள் சண்டைக்குப் பிறகு கடந்த 8ம் தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button