இந்திய திரையுலகில் தமிழ் உள்பட 20 மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் சீனியர் பாடகி ஆஷா போஸ்லே, நேற்று மும்பை மருத்துவமனையில் தனது 92வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆஷா போஸ்லே கடுமையாக போராடி வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று ஆஷா போஸ்லே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில், மும்பை சிவாஜி பூங்காவில் நடக்கிறது என்று, ஆஷா போஸ்லே மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »