ஓட்டமாவடியில் நேற்று ஒன்பது ஜனாசாக்கள் நல்லடக்கம்

சுகாதார அமைச்சின் வழிகாட்டல் சுற்று நிரூபத்திற்கு அமைய வெள்ளிக்கிழமை மாத்திரம் முஸ்லிம்களின் ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்படி அட்டாளைச்சேனையில் உயிரிழந்த ஒருவர், காத்தானகுடியில் உயிரிழந்த ஒருவர், அக்கறைப்பற்றில் உயிரிழந்த ஒருவர், சாய்ந்தமருதில் உயிரிழந்த மூவர், கோட்டமுனையில் உயிரிழந்த ஒருவர், ஏறாவூரில் உயிரிழந்த இருவர் என மொத்தம் ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று 350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 84960 ஆகவும் மொத்த கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 493 ஆகவும் உயர்ந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply