கே. கே. எஸ். வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணி 27 நிறுவனங்களிடம் இன்று கையளிப்பு
யாழ். தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கும் வகையில் காங்கேசன் துறை வரை யான ரயில் நிலையங்களை மீளமை க்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக் கப்பட உள்ளதாக போக்கு வரத்து அமைச்சு தெரிவித்தது.
யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த வருட முடிவுக்குள் தாண்டிக்குளத்தில் இரு ந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. தாண்டிக்குளத்தில் இருந்து காங் கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் பொறுப் பேற்றுள்ளனர்.
மேற்படி ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக் கப்பட உள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை மேல் மாகாண கலாசார மையத்தில் இடம்பெற உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply