தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது: ஈ.பி.ஆர்.எல்.எப்

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் பத்மநாபா பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, அகதிகள் நிவாரணம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததென கட்சியின் தலைவர் ஆர்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
 
கட்சிகளின் தனித்துத்தைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒரே கூட்டணியாக சகல கட்சிகளும் இணைந்து கொள்ளவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
கட்சி கொள்கைகளுக்கு இடையில் முரண்பாடு காணப்பட்ட போதிலும், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை என ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply