ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது : சிரிய இராணுவம்

கிளர்ச்சிக்காரர்கள் அதிரடி தாக்குதலை மேற்கொண்டுசிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவ அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளர்ச்சியாளர்களிற்கு ஆதரவுவழங்க தயார் என தெரிவித்துள்ள சிரிய பிரதமர் முகமட் காஜி அல் ஜலாலி இடைக்கால அரசாங்கத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க தயார் என தெரிவித்துள்ளார்.

நான் எனது வீட்டில் இருக்கின்றேன் தப்பியோடவில்லை நான் இந்த நாட்டை சேர்ந்தவன் என்பதால் தப்பியோடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply