பாகிஸ்தான் ஜனாதிபதி அடுத்த மாதம் இலங்கை வருகிறார்
பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்த நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரது இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை பலப்படுத்திக் கொள்வதன் நோக்கமானதென அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சேஹ் மொஹமட் குருசி உள்ளிட்ட வர்த்தகக் குழுவினர் வரவுள்ளதாக அந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் இரண்டு நாட்கள் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply