இன்றும் நாளையும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு
இன்றும் நாளையும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையொட்டி 35 இடங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிலும் தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ளது. இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 பேர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் காத்தான்குடி நகரசபை பிரிவில் 163 பேரும் ஏறாவூர் நகரசபை பிரிவில் 177 பேரும் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் 88 பேரும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் இடங்களில் தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூர்ய அறிவித்துள்ளார். இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள இடங்களுக்கு தலா இரண்டு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply