பாகிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்;30 பேர் பலி 125 பேர் காயம்

பாகிஸ்தானின் பைஸலாபாத் நகரில் எரிவாயு நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியானதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர்.தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 260 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தில் அந்நாட்டுப் புலனாய்வுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்த அலுவலகங்கள் மீது குறிவைக்கப்பட்டிருக்கலாம் என சில வெளிநாட்டு செய்திச் சேவைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. தாக்குதலின் பின்னர் பாரிய அதிர்வுச் சத்தம் கேட்டதாகவும் அருகிலுள்ள கட்டிடங்கள் பலவும் இடிபாடுகளுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டு இராணுவத்தினருடன் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply