ஸ்ரீதரன் எம்.பி. மீது தாக்குதல் : பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். தன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை முன்வைத்தார்.

அவரின் சிறப்புரிமை மீறல் குறித்து கவனம் செலுத்துவதாகக் கூறிய சபாநாயகர், அது தொடர்பான அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார். சிறப்புரிமை மீறல் பிரச் சினையை முன் வைத்த எஸ். ஸ்ரீதரன் எம்.பி. கூறியதாவது: எனது கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து கொழும்புக்கு வருகையில் அனுராதபுரத்தில் வைத்து என் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

இதன் மூலம், எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். கடந்த பாராளுமன்றத்தில் இருந்த மூன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பிகள் கொல்லப்பட்டனர்.

எம் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன் என்றார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை நடத்தி வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவிலலை என்றும் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply