ஸ்ரீதரன் எம்.பி. மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்குமென்று நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சுற்றாடல் துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
தன்மீது நடத்தபட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப் பினர் ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை எழுப்பி யதுடன், இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக் கப்பட வேண்டும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது நடை பெற்று வரும் நிலையில், விசா ரணை அறிக்கைகள் கிடைத்த பின் னர் சம்பந்தப்பட்டவர் களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்தஷன யாப்பா தெரிவித்தார்.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை அரசாங்கம் கடுமையாகக் கண்டி க்கிறது.
தமிழ், முஸ்லிம், சிங்கள இனத் தவருக்காவது இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றாலும் அரசாங்கம் அவற்றை ஏற்றுக்கொள்ளாது, கடுமையான எதிர்ப்பைத் தெரிவிகக்கிறது. விசாரணைகள் பூர்த்தியடைந்ததும் சம்பந்தப்பட்ட வர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப் பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப் பாணத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வாகனம் மீது நொச்சி யாகம பிரதேசத்தில் குண்டுத் தாக்கு தல் நடத்தப்பட்டிருந்ததுடன், துப்பாக்கி பிரயோகமுமம் மேற்கொள் ளப்பட்டிருந்தது.
மூவர் தமது வாகனத்தைத் துரத்தித் துரத்திச் சுட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பாராளு மன்றத்தில் அறிவித்திருந்தார்.
இச்சம்பவம் குறித்த விசார ணைகளை நடத்துவதற்கு அநுராத புரம் பொலிஸார் விசேட குழு வொன்றை நியமித்திருப்பதுடன் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான முக்கியமான தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply