குமரன் பத்மநாதனை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு ரணில மீண்டும் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.வழக்கு விசாரணைகளுக்காக குமரன் பத்மநாதனை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு இந்தியா கோரினால் அதற்கு இலங்கை அரசாங்கம் செவி சாய்க்க வேண்டுமென ரணில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் குமரன் பத்மநாதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்ளின் அடிப்படையிலேயே குமரன் பத்மநாதனை ஒப்படைக்க முடியும் என ஆளும் கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனை இந்திய நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டுமாயின் அந்த நாடு உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கோரி;க்கை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்திய நீதிமன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் ரணில் விக்ரமசிங்க சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டதாக ஆளும் கட்சியின் பிரதமா கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் பிரபாகரன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே தாம் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் குற்றவாளி என்ற காரணத்தினால்தான் தாம் அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரபாகரனை நேரில் சந்திக்க விரும்பியதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply