கனடாவிலிருந்து இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார்
எம்.வி.சன் சீ கப்பலில் கடந்த வருடம் கனடாவுக்கு சென்றிருந்த 492 பேரில் ஒருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார் என ஏ.எப்.பீ செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து அவர் நாடு கடத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இந்த நபர் கடந்த காலத்தில் இருந்திருப்பதால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்க முடியாதென கனடாவின் குடிவரவுத் துறை அகதிகள் சபை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.
32 பேரை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் கனடிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களில் இவரும் ஒருவராவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply