நோர்வேயில் ஆளும் கட்சி இளைஞர் முகாமில் துப்பாக்கி சூடு 80பேர் பலி

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தலைமை அமைச்சரின் அலுவலகத்திற்கு அருகில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிட நேரத்தில் ஒஸ்லோவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள உட்டோயா தீவில் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் புகுந்த ஒரு நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 80 பேர் பலியாகியுள்ளனர்.காவல்துறையினரின் சீருடை அணிந்தவாறு அங்கு வந்த நபர் இயந்திர தன்னியக்க துப்பாக்கியால் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி சாரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

பலர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய போது அவர்களை நோக்கியும் அந்நபர் சூடு நடத்தினார். இதனால் 80பேர் கொல்லப்பட்டது மட்டுமன்றி பலர் காயமடைந்துள்ளனர்.

சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இளைஞர் முகாமுக்கு  நோர்வேயின் தலைமை அமைச்சர் வருகை தருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அவரது வருகை சற்றுத் தாமதமாகியதால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார். அந்த இளைஞர் முகாமிலிருந்த கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல், தலைமை அமைச்சருக்கு  குறிவைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தலைநகர் ஒஸ்லோவில் தலைமை அமைச்சரின் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடத்தொகுதியில் நேற்று மாலை 3.30மணியளவில் இரு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் தீவுப்பகுதியில் 80பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 15பேர் காயமடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply