அமெரிக்க பிரேரணை இனப்பகைமையை தூண்டுவதற்கான சதி
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை தொடர்பில் இலங்கையில் பாரிய மாயையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பிரேரணையானது தமிழர்களுக்குத் தனிநாட் டைக் கொடுப்பதைப் போன்றும், சிங்களவர்களைப் பழிவாங்குவ தைப் போன்றதென்றும் மாயையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப் பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், இந்த விடயத்தைக் கொண்டு இனங்களுக் கிடையில் மீண்டும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கில் மாயையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை தமிழர்களுக்கு ஆதரவானதென்றும், சிங்கள இனத்தவர்களுக்கு எதிரானதென்றும் பாரிய மாயை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இவை வெறும் மாயைத் தோற்றங்களே.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறான மாயைகள் மூலம் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாம் அனைவரும் இனவேறுபாடுகளை மறந்து இலங்கையர்கள் என்ற நிலையில் ஒன்றுபட வேண்டும்.
வெளிநாடொன்று இலங்கையின் உள்விவகாரத்தில் மூக்கை நுழைக்க இடமளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். இதன்மூலம் இவ்வாறான நடவடிக் கைகளை முறியடிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, எகிப்து உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் பலவந்தமாக உள்நுழைந்த அமெரிக்கா ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றுள்ளது. தற்பொழுது இலங்கையிலும் கைவைப்பதற்கு முயற்சிக்கிறது. இதற்கு நாம் ஒருபோது அனுமதிக்கக் கூடாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தான் மீண்டும் ஜெனீவா செல்லவிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கட்டார் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விசேட செய்தியொன்றை அந்நாட்டுத் தலைவர்களிடம் கையளிக்கவிருப்பதாகவும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply