இலங்கையில் மீண்டும் யுத்தம் வெடிக்கும் அபாயம்: அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால், இலங்கையில் மீண்டும் மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இவ்வாறு எச்சரித்துள்ளார். சர்வதேச செய்தி நிலையமொன்றுக்கு ரொபேட் ஓ பிளேக் இது குறித்து கூறியுள்ளதாகவது,

இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோற்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள்.

இலங்கையிலும் இதேபோன்ற நிலையை நாம் எதிர்பார்க்கக் கூடும்.மேலும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது. ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.

இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும். இவ்வாறு ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply