பாக்கிஸ்தானின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை – ஹிலாரி அதிருப்தி

தீவிரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கை போதாது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கண்டித்துள்ளார். அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஹிலாரி சந்தித்தார். இதை தொடர்ந்து டெல்லி வந்த ஹிலாரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை தண்டிப்பது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:

தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டியதன் அவசியத்தை எல்லோரும் உணர்ந்துள்ளோம். தீவிரவாதத்துக்கு 30 ஆயிரம் பேரை பாகிஸ்தான் பறிகொடுத்துள்ளது. தீவிரவாத செயல்களுக்காக தனது நாடு பயன்படுத்தப்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கை போதாது. தீவிரவாதத்தை அழிக்க கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சதியை தீட்டியது தீவிரவாதி ஹபீஸ் சயீது என்று அமெரிக்கா கருதுகிறது. அவனை பற்றிய தகவல் கொடுத்தால் ஸி53 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்கா எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காட்டுகிறது. ஹபீஸ் சயீது பிடிபடுவான் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹிலாரி கிளின்டன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply