கியூ பிரிவு பொலிசாரின் தீவிர கண்கானிப்பில் இலங்கை அகதிகள்!

இலங்கையில் இடம்பெற்ற போர் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவுக்கு வந்தது. இறுதிக் கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசு மனித உரிமையை மீறி கொத்துக்குண்டுகளை வீசி தமிழர்களை அழித்ததாக உலகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

பல்லாயிரம் தமிழர்களைப் பலிகொண்ட இந்தப் போர் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் போர் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க கியூ பிரிவு பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகளை கியூ பிரிவு பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து கியூ பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,’முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் தவிர வெளி நபர்கள் யாரும் தங்கியுள்ளனரா? போர் நினைவு தினத்தையொட்டி சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்படுகின்றனரா? என கண்காணித்து வருகிறோம்.

அதேபோல் வெளியில் வீடு பிடித்து தங்கியுள்ள இலங்கை தமிழர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply