பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ள போர்க் குற்றவாளிகள்
பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட போர்க்குற்றவாளிகள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் ‘தி சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவின் மனித உரிமைச் சட்டங்கள் காரணமாக படுகொலைகள்இ பாலியல் குற்றச்சாட்டு போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் நாடு கடத்தப்பட முடியாத நிலை காரணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, ஆப்கான், ஈராக், ருவாண்டா, சியாராலியோன் மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போர்க்குற்றவாளிகளே பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
18 மாதங்களில் 207 பேர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் கோரிக்கை விடுத்த நிலையில் 12 பேர் மாத்திரம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply