வீட்டுக் கடன் செலுத்துவதில் வடக்கு கிழக்கு மக்கள் முன்னிலையில்
வீட்டுக்கடன் செலுத்தும் விடயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கிளிநொச்சி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளதாக வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டுக் கடன் செலுத்துவதில் மார்ச் மாதம் 5ம் இடத்தை பிடித்த வவுனியா மாவட்டம் ஏப்ரல் மாத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவன் ஆலோசனைக்கு அமைய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்பு கடன் சேகரிப்பில் கூடிய தொகையை ஏப்ரலில் பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கிளிநொச்சி188%, யாழ்ப்பாணம் 105%, முல்லைத்தீவு 99%, வவுனியா 141%, மன்னார் 91%, திருகோணமலை 127%, மட்டக்களப்பு 109%, அம்பாறை 110%, என்றவாறு வீட்டுக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply