இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவ கமாண்டருக்கு எதிராக வழக்கு
முன்னாள் பொஸ்னிய-சர்பிய இராணுவ கமாண்டர் ரட்ச்கோ மிலாடிச் பொஸ்னியாவில் திட்டமிட்டு ‘இன அழிப்பு’ நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அவருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கின் முதல்-நாள் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் போர்க்காலக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஜெனரல் மிலாடிச் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.
இந்தக் குற்றங்களின் பின்னணியில் இவர்தான் இருந்திருக்கிறார் என்பதை தம்மால் நிருபிக்க முடியும் என்று த ஹேக் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுனர் தரப்பு வழக்குறைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறியுள்ள ஜெனரல் மிலாடிச், தன் மீதான குற்றச்சாட்டுக்களை ‘கொடூரமானது’ என்று வர்ணித்துள்ளார்.
1995ம் ஆண்டில் ஸ்ரப்ரேனிசாவில் சிறார்கள் உட்பட 7000க்கும் அதிகமான முஸ்லிம் ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நடத்தியதாக ஜெனரல் மிலாடிச் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சரயேவோ நகரை 44 மாதங்களாக முற்றுகையில் வைத்திருந்ததன் மூலம் 10,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரப்ரேனிசா படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றது
ஸ்ரப்ரேனிசா படுகொலைகள் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன
த ஹேக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்’ வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, ஜெனரல் மிலாடிச்க்கு எதிரான வழக்கு பற்றிய ஒலி-ஒளி விவரணப் பதிவொன்று வெளியிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் பார்வையாளர் அரங்கிலிருந்த மக்களுக்கு சைகைகளைக் காட்டிய ஜெனரல் மிலாடிச்சைஇ நீதிபதி விசாரணையில் கவனம் செலுத்துமாறு எச்சரித்தார்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பமாக இருந்த தருணத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பப் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.
இந்த வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்த வேண்டும் என்று ஜெனரல் மிலாடிச் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 ஆண்டுகளாக சட்டத்தின்பிடியில் சிக்காமல் இருந்த ஜெனரல் மிலாடிச், கடந்த ஆண்டில் சர்பிய படையினரால் பிடிக்கப்பட்டு த ஹேக்- நகரை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply