அரசாங்கம் உரிய பதிலை தர வேண்டும் – கூட்டமைப்பு

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உரிய பதிலை எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கருத்தை வெளியிட்டார்.

அண்மையில், இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகியன தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதியுடன் தாம் கதைத்த விடயங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க, ஆர்.சம்பந்தனுக்கு விளக்கமளித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அரசாங்கத்திடமிருந்து தாம் உரிய பதிலை எதிர்பார்ப்பதாக இதன்போது சம்பந்தன் குறிப்பிட்டதாக செய்தித்தாள்கள் குறிப்பிட்டிருந்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply