ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவென ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள பீரிஸ் தனது விஜயத்தின் இரண்டாம் நாளான நேற்று கேபிடல் ஹில் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்விற்கு அனைத்துக்கட்சி குழுவை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி – ரணில் இடையே கடந்த திங்களன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் யாப்புத் திருத்தம் குறித்து இக்குழு கவனம் செலுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply