கொழும்பு – களுத்துறை சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மற்றும் களுத்துறைச் சிறைச்சாலைகளில் விசாரணைகள் எதுவும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் சுமார் 300 பேர் இன்று வியாழக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டத்தை இவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 150 கைதிகளும், கொழும்பு- வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள சுமார் 180 கைதிகளுமே இன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மூன்று வருட நிறைவு நினைவு கூறப்படும் நிலையில், குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இச் சம்பவங்கள் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து மூன்றான்டுகள் நிறைவு கூறப்படும் இந் நேரத்தில் கூட ஈழத் தமிழ் இளம் சமூதாயத்தின் சுதந்திரம், பாதுகாப்பு என்பதற்கு முடிவு வரவில்லை என்பதையே காட்டுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply